தொட்டிலில் தொடங்கி, என் கணவரின் கட்டிலுக்கு வரும்வரை என் தாய் மூகத்தைத் தவிர வேறு முகத்தை தான் பார்த்தது கிடையாது.
'ஜானகி பொல்லாத பெண்' என்பார்கள் சிலர். 'நெருப்பு* என்பார்கள் சிலர். அவளிடம் பேச்சுக் கொடுக்காதீர்கள்" என்று, தங்கள் பிள்ளைகளை எச்சரிப்பார்கள் பலர்.
பால் வாங்கப் போனால் அந்தப் பாலை மட்டும் தான் பார்ப்பேன். தண்ணீர் எடுக்கப் போனால், குடம் தெரியும். அப்படியும் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எட்டாம்
வகுப்பு வரை படித்து விட்டேன். அன்றைய எட்டாம் வகுப்பு இன்றைய பட்டப் படிப்பு கள் கூட எட்ட முடியாத படிப்பு. தமிழ் இலக்கணம் முழுவதும் தெரிந்து விடும். ஆங்கில அறிவும் ஓரளவுக்கு
வந்து விடும்.
வயது பதினாறு — நான் ருதுவாகும் போது. பதினாறு வயது என்றாலே பளபளப்பாகத்தானே இருக் கும். அதிலும் வயது வந்த இளைஞர்களுக்குக் கொஞ்சம் பரபரப்பாகவும் இருக்கும்.
கட்டிக் கொள்ளப் பலர் முன் வந்தார்கள். ஆனால் கொட்டிக் கொடுக்க என் தாய் தந்தையரிடம் பெரும் பணம் இல்லை.
"பெண்ணைப் பார்; பிடித்தால் கட்டிக்கொள். நாங்கள் போடுவதைத்தாள் போடுவோம்" என்று கூறி விட்டார்கள். அழகையும் பண்பாட்டையும் பார்த்து வரக் கூடியவர்கள் 'உலகத்தில் இல்லாமலா போனார்கள்!
அப்படி ஒருவர் வந்தார். அவரது பெயரை நான் சொல்லக் கூடாது. இது அப்போது நடந்த நிகழ்ச்சியாகையால் ரகசியமாகச் சொல்கிறேன். அவர் பெயர் சுரேந்திரன்.
பெண் பார்க்க வந்தபோது பெற்றோருடனேயே வந்தார். அவர் என்னையும் பார்த்தார்; என் கண்ணையும் பார்த்தார்.
எங்கள் வீட்டில் இருக்கும்போதே, என் காது கேட்கவே, "எனக்கு இந்தப் பெண்தான் வேண்டும்" என்று சொல்லிவிட் டார். அதனால் சீர்வரிசைகனைப் பற்றிய தகராறு எழவில்லை.
"போடுவதைப் போடுங்கள்" என்று சொல்லிப் பேசி
முடித்தார்கள், மாப்பிள்ளை வீட்டார். கல்யாணம் நன்றாகவே நடத்தது. மாப்பிள்ளை வீட் டாரே எனக்கு வைரத்தோடு போட்டார்கள். எனக்கு மாங்கல் யமும் அவர்களே செய்து கொண்டு வந்திருந்தார்கள்.
மாங்கல்யம் மாப்பிள்ளை வீட்டார் செய்வது வழக்கம்
தானென்றாலும், அவர்கள் பெண்ணுக்கு வைரத்தோடு போடு
வது அதிசயம்.
'பிள்ளைக்கு வைரத்தில் என்ன போடுகிறீர்கள்?' என்று கேட்கின்ற ஒரு சமூகத்தில், பெண்ணுக்கு அவர்களே நகை போடுவது அதிசயமில்லையா?
மாப்பிளைக்கு சொந்த ஊர் மாயூரம் என்றாலும், ஒரு தலைமுறையாகக் குடியிருப்பது சென்னையில் தான். 'நான் இருந்தது திருக்கடையூரில், அபிராமி சந்திதியில். திருமணம் நடந்ததும் அங்கேதான்.
முதற் கல்யாணம் முழு மரியாதையுடன் நடந்து விட்டது என்பதிலே என் தாயாருக்குப் பரம திருப்தி.
மற்ற தங்கைகளெல்லாம் வயதுக்கு வராமல் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment