ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வரலாற்றை எழுதப் புகுந்தால், நாட்டுக்குப் பல இராமாயணங்கள் கிடைக்கும். கற்பனை வளம் மிக்க கம்பன் எழுதியதாலேயே ஸ்ரீராமச்
சந்திர மூர்த்தியின் கதைக்கு ஒரு தனி மரியாதை எழுந்தது.
அப்படிக் கற்பனை உள்ளவர்கள் யாரேனும் இருந்தால்,
அவர்கள் எழுதட்டுமே என்றுதான் மற்றும் ஒரு ஜானகி தன்
கதையைத் துவங்குகிறான்.
கேளுங்கள்:
நானும் நல்ல இடத்தில் பிறந்தவள்தான். நல்ல இடம் என்றால், எங்கள் கிராமத்திலே, லட்சக்கனக்கில் பணம் வைத்திருப்பவர்கள் என்று அர்த்தமல்ல. தாய், தகப்பன், பாட்டன், பாட்டி எல்லாருமே உத்தமமாக வாழ்ந்தவர்கள் என்று அர்த்தம்.
என் தாய் ஒரு மகாலெட்சுமி,
ஸ்ரீதேவிக்கு மூதேவியா மகளாகப் பிறப்பான்?
மூத்த பெண்ணாக நான் பிறந்தேன். எடுத்த எடுப்பில் பெண்ணைப் பெற்று விட்டாளே என்று, என் தந்தையைப் பெற்ற பாட்டிக்குப் பெரும் கோபமாம்.
பிரசவித்த என் தாயார்க்கு மாமியார் வந்துதான் மருந்து எடுத்துக் கொடுக்க வேண்டுமாம்; அந்த மருந்தைக் கொடுக்கக் கூட என் பாட்டி மறுத்துவிட்டார்களாம்.
அவர்களும் பெண்தானே! ஆண் பிள்ளை பிறந்தா லென்ன அள்ளியா கொடுக்கப் போகிறது?
ஆண் அரசாளுவானாம்; பெண் பீடையாம்! நான் பிறந்தவுடனேயே என் பாட்டிக்குப் பீடையாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.
அவர்கள் அதிருஷ்டமோ, என் தாயைப் பிடித்த துரதிருஷ் டமோ அடுத்தடுத்து மேலும் மூன்று பெண் குழந்தைகளே பிறந்தன.
'இவள் வயிறெல்லாம் பெண்ணாகவே இருக்கிறது"
என்று அலுத்துக் கொண்ட என் பாட்டி, என் தாயையே
ஒரு பீடை என்று கூறி விட்டார்களாம். அதற்காக தந்தை
எங்களைக் கைவிடவில்லை.
தாயிடம் நான் பால் குடித்தேன் என்பதைத் தவிர, தந்தையின் தோன்களிலேயே வளர்ந்தேன்.
ஆனால் மூன்று வயதிலிருந்தே ஒரு முழுமை பெற்ற பெண்ணின் நாணமும், அச்சமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கின.
ஆண் பிள்ளைகளோடு விளையாட மாட்டேன். அவர்கள் தொட்ட மிட்டாயைத் தொடமாட்டேன். சிறுவர்கள் இருக் கும் போதுகூட என்னைக் குளிப்பாட்ட ஒப்புக்கொள்ள மாட்டேன்.
அந்த வயதிலேயே எப்படி இப்படி என்கிறீர்களா? அது என் தாய் எடுத்த எடுப்பிலேயே கொடுத்த சீர்வரிசை
தொடரும்
No comments:
Post a Comment